Latest Updates
-
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
பொலிவிழந்து இருக்கும் முகத்தை பளிச்சுன்னு மாத்தணுமா? அப்ப காபித் தூளை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை 25-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் வெற்றிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு கடலால் உருவாகியுள்ள புதிய ஆபத்து என்ன தெரியுமா? -
கேட்டரிங் ஸ்டைல் கோவைக்காய் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கிளி மூக்கு மாங்கா இருந்தா.. இப்படி ஒருடைம் சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சும்மா அள்ளும்...
Pachamanga Chutney Recipe In Tamil: தற்போது மாங்காய் சீசன் என்பதால், விலைக் குறைவில் மார்கெட்டுகளில் மாங்காய் விற்கப்படும். இப்படி விற்கப்படும் மாங்காயை வாங்கினால், பெரும்பாலானோர் அதை சாம்பாரிலோ அல்லது பச்சடியாகவோ செய்து சாப்பிடுவார்கள். ஆனால் அந்த மாங்காயைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம்.
இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இது தவிர இந்த சட்னி கம்மங்கூழ், ராகி கூழ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், வேலைக்கு செல்பவர்கள் சட்டென்று சமையலை முடிக்க இதை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு செய்ய ஏற்றதாக இருக்கும். மாங்காய் சட்னி இனிப்பும் புளிப்பும் கலந்து இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சமாங்கா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்ச மாங்கா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கிளி மூக்கு மாங்காய் - 1 கப்
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 5
* தேங்காய் துண்டு - 1/2 கப்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 2
* கல் உப்பு - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் மாங்காய் துண்டுகளை சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 சிறிய துண்டு இஞ்சி, 5 சின்ன வெங்காயம், 1/2 கப்
தேங்காய் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, 2 வரமிளகாய், 2 பச்சை மிளகாய்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி முதலில் கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பச்சை
மாங்கா சட்னி தயார்.



Click it and Unblock the Notifications