Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
Pachai Payaru Vadai Recipe In Tamil: மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், காலநிலை குளுகுளுவென்று இருக்கும். இப்படியான சூழ்நிலையில் மாலை வேளையில் நல்ல சூடான காபி, டீயுடன் மொறுமொறுவென்று ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வடை பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் வடையை செய்யாமல், 1 கப் பச்சை பயறு இருந்தால், அதைக் கொண்டு வடை செய்யுங்கள்.
இந்த வடை சுவையானது மட்டுமின்றி, புரோட்டீன் நிறைந்ததும் கூட. எனவே இந்த பச்சை பயறு வடை அடிக்கடி செய்து சாப்பிடும் போது, ருசியாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. வளரும் குழந்தைகளுக்கு பச்சை பயறை கொடுக்கும் போது, உடல் வலுவுடன் இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* வரமிளகாய் - 7
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் 7 வரமிளகாய், 1 கொத்து
கறிவேப்பிலை, 1 இன்ச் பொடியாக நறுக்கிய இஞ்சி சுவைக்கேற்ப உப்பு
மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்த பச்சை பயறை சேர்த்து, சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த பச்சை பயறை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி
தட்டையாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை சேர்த்து
பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான பச்சை பயறு வடை தயார்.



Click it and Unblock the Notifications