Latest Updates
-
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் டாப் 3 கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
எப்பவும் பச்சை பயறை கடையாம.. ஒருமுறை இப்படி குழம்பு செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்..
Pachai Payaru Kuzhambu Recipe In Tamil: எப்போதும் காய்கறிகளைக் கொண்டு மட்டும் குழம்பு, சாம்பார் போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு சமையல் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் பச்சை பயறு இருந்தால், அதை முளைக்கட்ட வைத்து குழம்பு செய்யுங்கள்.
ஒருவேளை முளைகட்ட வைக்காவிட்டாலும், வெறும் பச்சைப்பயறு கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த பச்சை பயறு குழம்பு சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முளைக்கட்டிய பச்சை பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முளைக்கட்டிய பச்சை பயறு/ பச்சை பயறு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 6 பல்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
அதில் சீரகம், பிரியாணி இலை, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பு
தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள், மல்லித் தூள், குழம்பு மிளகாய் தூள், கரம்
மசாலா சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும்
வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து பச்சை பயறு அல்லது முளைக்கட்டிய பச்சை பயறை சேர்த்து நன்கு
கிளறி விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி
கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், சுவையான பச்சை
பயறு குழம்பு தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications











