Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துடும்..
Pachai Payaru Kulambu Recipe In Tamil: மதியம் சமைக்க காய்கறிகள் எதுவும் இல்லையா? என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறு கொண்டு குழம்பு செய்யுங்கள். அதுவும் தேங்காய் அரைத்து ஊற்றி, இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்கள்.
இப்படி குழம்பு செய்யும் போது கறிக்குழம்பே தோற்றுப் போகும் அளவில் சுவை அவ்வளவு ருசியாக இருக்கும். இப்படி பச்சை பயறை குழம்பு செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்யலாம்.

உங்களுக்கு பச்சை பயறு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பச்சை பயறு - 1/2 கப்
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறி மசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸபூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 மூடி
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 5 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பை போட்டு, 1/4
கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து, மிளகாய் தூள் சேர்த்து
கிளறி, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறி மசாலா தூள் சேர்த்து நின்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க
வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை
பயறை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும்
சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும்
எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், சுவையான பச்சை பயறு குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications