Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அடுப்பே இல்லாம ஒருமுறை இப்படி ரசம் வையுங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Pacha Puli Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் ரசம் வைத்து சற்று போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஆந்திராவில் பிரபலமான பச்ச புலுசு ரசத்தை வையுங்கள். இந்த ரசத்தின் ஸ்பெஷலே, இதை செய்ய அடுப்பு தேவையில்லை. ஆம், இந்த ரசம் செய்வதற்கு அடுப்பு எதுவும் தேவையில்லை.
இடி உரலில் மசாலாக்களைப் போட்டு தட்டி, புளி நீரில் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்தாலே போதும். இப்படியான ரசம், வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால் அப்போது செய்வதற்கு வசதியாக இருக்கும். நீங்கள் ரசப் பிரியர் என்றால், ஒருமுறை இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் பச்ச புளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்ச புளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புளி - 1 எலுமிச்சை அளவு
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இடி உரலில் 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 6
சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக
நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு, அதில் நீரை ஊற்றி, 15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அந்த புளியை கைகளால் நன்கு பிசைந்து, வடிகட்டி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள மிளகு சீரகத்தைப் போட்டு,
அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி நீரை ஊற்றி, பின் அதில் சற்று
கூடுதலாக நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் பெருங்காயத்
தூள் சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட்டால், சுவையான பச்ச புளி
ரசம் தயார்.



Click it and Unblock the Notifications