Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
5 நிமிடத்தில் இந்த பச்ச புளி கார சட்னியை செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Pacha Puli Kara Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? ஒவ்வொரு நாளும் இந்த இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷை முடிவு செய்வது பெரும்பாடாக இருக்குமா? நீங்கள் வேலைக்கு செல்பவரா? அல்லது பேச்சுலரா?
அப்படியானால் சிம்பிளான சட்னி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். அப்படி 5 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சட்னி தான் பச்ச புளி கார சட்னி. இந்த சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருப்பதனால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பச்ச புளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்ச புளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புது புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 6
* உப்பு - சுவைக்கேற்ப
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை நார், ஓடு எல்லாம்
நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் புளியை சேர்த்து, அத்துடன் 6 பல் பூண்டு, 6
பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் 2 கைப்பிடி சின்ன வெங்காயத்தைப் போட்டு, 2 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஜாரை திறந்து, சட்னியை வழித்துவிட்டு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, மீண்டும் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான பச்ச புளி கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications