Latest Updates
-
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
1/2 கப் பச்சை பயறு வெச்சு.. ஈவ்னிங் பிள்ளைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு குடுங்க.. சத்தானதும் சுவையானதும் கூட...
Green Gram Bonda Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளையின் பசியை போக்க ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், பச்சை பயறு கொண்டு போண்டா செய்யுங்கள்.
இந்த பச்சை பயறு போண்டா, உளுந்து போண்டாவை போன்றே சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் இது சற்று பச்சையாக இருக்கும். இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், உங்கள் பிள்ளைகள் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு பச்சை பயறு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/2 கப் (6-8 மணிநேரம் ஊற வைத்தது)
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* அரிசி மாவு - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கேரட் - 1 (துருவியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் 6-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சை பயறு சேர்த்து, அத்துடன்
சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, நீர் சேர்க்காமல்
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரிசி மாவை சேர்த்து, அதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம்
மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டில் கேரட் இருந்தால், அதையும் துருவி சேர்த்துக்
கொள்ளுங்கள்.
* பின்னர் அந்த கலவையை நன்கு கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான
பச்சை பயறு போண்டா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications