Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1/2 பாசிப்பருப்பு இருந்தா.. ஒருவாட்டி இந்த குழம்பை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Paasiparuppu Kulambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம், தக்காளி தான் உள்ளதா? மதியம் சாதத்துக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு குழம்பு செய்யுங்கள்.
இந்த பாசிப்பருப்பு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் செய்வீர்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 1/2 கப் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின்
அதை குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு பருப்பை மசித்து
விட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை
மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
பூண்டு பற்களையும் சேர்த்து, வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை
சேர்த்து, அதோடு பெருங்காயத் தூள் மற்றும் 1 1/4 கப் நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தேங்காயை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் நெய் ஊற்றி கலந்து இறக்கினால், சுவையான
பாசிப்பருப்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications