Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
ரோட்டுக் கடையில் சீம்பால் என்ற பெயரில் விற்கப்படும் பால் கடம்பு... வீட்டிலேயே எப்படி செய்யலாம் தெரியுமா?
Paal Kadambu Recipe: பொதுவாக பாலால் செய்யபடும் ஸ்வீட் என்றால் கொஞ்சம் விலை கூடுதலாகத்தான் இருக்கும். ஒரேயொரு பால் ஸ்வீட் மட்டும் விலைக் குறைவாக இருக்கும். அதுதான் சாலையோரக் கடைகளில் சீம்பால் என்ற பெயரில் விற்கப்படும் பால் கடம்பு. கிட்டதட்ட சீம்பாலின் சுவையிலேயே இருக்கும் இது 10 ரூபாய்க்கு பெரும்பாலான சாலையோரக் கடைகளில் விற்கப்படுகிறது.
இந்த பால் கடம்பு சுவையானது மட்டுமல்ல உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும். இதன் அருமை தெரியாமலேயே நாம் அதனை நாம் பல காலமாக சாப்பிட்டு வருகிறோம். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்பை கடைகளில்தான் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதை வீட்டிலேயே நாம் எளிதாக செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- பால் - ½ லிட்டர்
- ஏலக்காய் - 2 அல்லது ½ டீ ஸ்பூன்
- சர்க்கரை - 100 கிராம்
- பால் பவுடர் - 100 கிராம்
- சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகர் - 7 கிராம்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முடிந்த வரை தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் எடுத்து
கொள்ளவும்.
- பாக்கெட் பால் என்றால் ஃபுல் கிரீம் மில்க் வாங்கி பயன்படுத்தலாம்
அல்லது கிடைக்கவில்லை என்றால் - சாதாரண பால் வாங்கி உபயோகித்து
கொள்ளுங்கள்.
- கிடைப்பதை வைத்து முயற்சி செய்வதில் ஏதும் தவறில்லை, பாலின் தன்மையை
பொறுத்து சுவையில் சிறிதாய் மாற்றம் இருக்கலாம்.
- பாலை அடுப்பில் வைத்து முழு வேக தீயில் நன்றாக கொதிக்க விடவும்.
- பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து
கொள்ளவும்.
- அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின் இரண்டு ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக பொடி செய்து
பாலுடன் சேர்த்து கொள்ளவும்.
- அதில் பால் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைய
விடவும்.
- நன்றாக கரைந்ததும் அதனுடன் சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகரை பொடியாக
நறுக்கியோ அல்லது உடைத்தோ சேர்த்து கரைய விடவும்.
- அகர் அகர் மேற்பரப்பில் கரைந்தது போல இருந்தாலும் அடிப்பகுதியில்
கட்டியாக இருக்கும், நன்றாக கரைத்ததை உறுதி செய்து கொள்ளவும்.
- பால் பொங்கி வரும் தன்மை கொண்டிருப்பதால், நன்றாக கரண்டி வைத்து
கலந்து கொண்டே இருக்கவும்.
- பால் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து சரியான
பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு தட்டு அல்லது அகலமான பாத்திரத்தில் நெய்யை தடவி கொள்ளவும்.
- காய்ச்சி வைத்த பாலை நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
- குறைந்து 4-5 மணி நேரம் ஆற வைக்க வேண்டும்.
- நன்றாக ஆறியதும் விளிம்புகளில் கத்தியால் கீறி பாத்திரத்தை தலை
கீழாக கவிழ்த்து தட்டினால் அப்படியே வேறு பாத்திரத்திற்கு
மாறிவிடும்.
- துண்டுகளாக நறுக்கினால் அருமையான ரோட்டுக்கடை சீம்பால் ரெடி.
- இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு ஆன அப்புறமும் சாப்பிடலாம்!



Click it and Unblock the Notifications