Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இனி ரோட்டுக்கடை பால் கடம்புவை வீட்லயே ஈஸியா செய்யலாம் தெரியுமா?.. எப்படி-ன்னு பாருங்க..
Paal Kadambu Recipe In Tamil: நீங்கள் கடைக்கு ஷாப்பிங் செல்லும் போது, ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் பால் கடம்புவை வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். அந்த பால் கடம்பு மிகவும் சுவையாக இருக்கும் அல்லவா?. நீங்கள் அந்த பால் கடம்புவை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அட்டகாசமான சுவையில் அதை செய்யலாம்.
சொல்லப்போனால் பால் கடம்பு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், இதை செய்து கொடுக்கலாம். இதனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்களுக்கு பால் கடம்புவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் கடம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டியான பால் - 1/2 லிட்டர்
* பால் பவுடர் - 1/4 கப்
* சர்க்கரை - 1/4 கப்
* அகர் அகர் - 5 கிராம்
* ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
* நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு நாண்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2
லிட்டர் கெட்டியான பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பால் பவுடரை சேர்த்து கட்டிகளின்றி நன்கு கிளறி விட
வேண்டும். அதுவும் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் அகர் அகர் சேர்த்து நன்கு கைவிடாமல் தொடர்ந்து கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து
8 நிமிடம் அகர்அகர் கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் ஒரு டம்ளரை எடுத்து, அதில் நெய்யை தடவி, அதில் இந்த கலவையை
ஊற்றி, வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்த பின், ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து 2
மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அதுவே ப்ரீசர் என்றால் 1
மணிநேரத்தில் தயாராகிவிடும். ஒருவேளை ஃப்ரிட்ஜ் இல்லாவிட்டால், 3
மணிநேரம் அப்படியே வைத்துவிட்டால், தயாராகிவிடும்.
* இறுதியில் டம்ளரில் செட்டாகியுள்ள கடம்புவின் முனைகளை கத்தியால்
கீறிவிட்டு, குப்புற போட்டு தட்டினால், சுவையான பால் கடம்பு
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications