Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த டீக்கடை வெங்காய வடையை செஞ்சு சாப்பிடுங்க... மொறுமொறுன்னு செமயா இருக்கும்..
Tea Kadai Vengaya Vadai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் வழக்கமாக செய்வது போன்று வடை, பஜ்ஜி செய்யாமல், கடைகளில் விற்கப்படுவது போன்ற சுவையைக் கொண்ட ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்கிறார்களா?
இதுவரை நீங்கள் டீக்கடை வெங்காய வடையை சாப்பிட்டிருக்கிறீர்களா? அந்த வடையின் சுவையே தனியாக இருக்கும். அந்த டீக்கடை வெங்காய வடையை செய்து கொடுங்கள். இந்த வெங்காய வடை நீங்கள் வழக்கமாக செய்வது போன்று இல்லாமல், சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த டீக்கடை வெங்காய வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை வெங்காய வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 3
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 இன்ச் (துருவியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை எடுத்து, அதில் உப்பு,
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கைகளால் நன்கு
பிசைந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சோம்பு தூள், கடலை
மாவு, மைதா மாவு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* முக்கியமாக இப்படி பிசையும் போது நீர் எதுவும் சேர்க்க வேண்டாம்.
ஒருவேளை அதிக நீராக இருப்பதை உணர்ந்தால், அத்துடன் சிறிது மைதா
மற்றும் கடலை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து
உருட்டி, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து,
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான டீக்கரை வெங்காய வடை
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications