Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
மதியம் 15 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த ரெசிபியை செய்யுங்க.. பருக்கை சோறு மிஞ்சாது...
Onion Pulao Recipe In Tamil: மதிய வேளையில் தினமும் சாம்பார், குழம்பு, பொரியல் என்று செய்து போரடித்துவிட்டதா? உங்களால் சமையலறையில் நீண்ட நேரம் சமைக்க பிடிக்கவில்லையா? சிம்பிளாக ஏதாவது சமைக்க நினைக்கிறீர்களா? அதே சமயம் வீட்டில் காய்கறிகளும் இல்லையா?
அப்படியானால் வீட்டில் வெங்காயம் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் வெங்காய புலாவ் செய்யுங்கள். இந்த வெங்காய புலாவ் 15 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இதற்கு சைடு டிஷ்ஷே தேவையில்லை. அப்படியே தேவைப்பட்டாலும் வெங்காய பச்சடி போதும்.

உங்களுக்கு வெங்காய புலாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 1
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1/2 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* பாசுமதி அரிசி - 1 கப்
செய்முறை:
* முதலில் நெல்லிக்காய் அளவு புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்து,
பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, நீரில் 10
நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, வரமிளகாய், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள, கரம் மசாலா, மிளகுத் தூள்
சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் கரைத்து வைத்துள்ள 1/2 கப் புளிச்சாறு மற்றும் 1 கப்
தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, உப்பு
சுவை பார்த்து, குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து 2 விசில் விட்டு
இறக்கினால், சுவையான வெங்காய புலாவ் தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications