Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
20 சின்ன வெங்காயமும், 1 ஸ்பூன் வேர்க்கடலையும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்பெஷல் சட்னியை அரைங்க..தாறுமாறா இருக்கும்!
Onion Peanut Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி செய்யப் போகிறீர்களா? இன்னும் என்ன சட்னி செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? இட்லிக்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னி போன்று ஏதாவது ஒரு சுவையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சின்ன வெங்காய வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.
இந்த சட்னியை செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு குறிப்பிட்ட சில பொருட்கள் இருந்தாலே போதும். இந்த சட்னியை மிகவும் குறைவான நேரத்திலேயே செய்து விடலாம். வேலை செல்வோர் மற்றும் பேச்சுலர்கள் இந்த மாதிரியான சட்னியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலமானது.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சின்ன வெங்காய வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சின்ன வெங்காய வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 20
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- அரை ஸ்பூன் கடலைப்பருப்பு
- அரை ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 2 பல் பூண்டு
- 4 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் புளி
- உப்பு தேவையான அளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- ½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ¼ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை மற்றும் 4 வர மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.]
- பருப்பு பொன்னிறமாக வரும் வரை லேசாக கிளறி விடவும்.
- பின்னர் பூண்டு மற்றும் 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- பிறகு சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் லேசான பொன்னிறமாகி அல்லது மென்மையாகும் வரை வதக்கவும். இந்த கலவையை முழுமையாக ஆற விடவும்.
- பின்னர் ஒரு மிக்சி ஜாரில் தேவையான அளவு உப்புடன் இந்த கலவையை சேர்க்கவும். ஊறவைத்த புளியை தண்ணீரில் பிழிந்து மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
- உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்து இன்னொரு முறை அரைத்து கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ½ டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும், ¼ டீஸ்பூன் கடுகு, ¼ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு வர மிளகாய் சேர்க்கவும்.
- பருப்பு லேசான பொன்னிறமாகும் வரை வறுத்து, பின்னர் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
- இதை சட்னியில் ஊற்றி நன்கு கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் வெங்காய வேர்க்கடலை சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications