Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
வீட்ல 2 பெரிய வெங்காயம் இருக்கா? அப்ப இந்த ஆனியன் மசாலா செஞ்சு பாருங்க... தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Onion Masala Recipe in Tamil: வீட்டில் சப்பாத்தி செய்தால் அதற்கு உருளை கிழங்கு குருமா, பன்னீர் பட்டர் மசாலா என வித விதமான சைடு டிஷ் செய்வோம். சில நேரம் வீட்டில் இரண்டும் இருக்காது அப்போது தக்காளி வைத்து தொக்கு செய்வோம். முட்டை மற்றும் சிக்கன் என அசைவ வகைகளை கொண்டு கூட சைடு டிஷ் செய்வோம்.
ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து 10 நிமிடத்தில் இப்படி ஆனியன் மசாலா செய்து பாருங்க. இது உங்க காலை நேர அவசர சமையலுக்கு உதவிய இருக்கறதோட சுவையும் அற்புதமாக இருக்கும். வாங்க சப்பாத்தி சைடு டிஷ் ஆனியன் மசாலா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம் - 10 அல்லது 15 அளவு
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 1
- தக்காளி - 1
- தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி - சிறிதளவு (1 இஞ்சி அளவு)
- பூண்டு - 10 அல்லது 12 பல்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ¼ டீ ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் தயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து ஸ்பூனால் நன்றாக அடித்து எடுத்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் டிக்கா வகைகளுக்கு நறுக்குவது போல் நறுக்கி உதிர்த்து கொள்ளவும்.
- பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் கழுவி தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து இஞ்சி உடன் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கி கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- கண்ணாடி பதம் வந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- அதே மீதம் இருக்கும் எண்ணெயில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பின் அரைத்து வைத்த தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.
- அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா
மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் அடித்து வைத்த தயிரை சேர்த்து கிளறி அரை கப் அளவிற்கு
தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்ததும் வதக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆனியன் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
