Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பேச்சுலர்களுக்கான.. ஈஸியான... ஆனியன் சிக்கன் ப்ரை
தினமும் ஒரே மாதிரியான சிக்கன் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆனியன் சிக்கன் ப்ரை செய்து சாப்பிடுங்கள்.
நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி சிக்கனை வாங்கி சாப்பிடுவீர்களா? தினமும் ஒரே மாதிரியான சிக்கன் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? நல்ல வாய்க்கு ருசியாக, அதே சமயம் வித்தியாசமான சுவையைக் கொண்ட ஒரு சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆனியன் சிக்கன் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆனியன் சிக்கன் ப்ரை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை அப்படியே கூட சாப்பிடலாம். குறிப்பாக இந்த ஆனியன் சிக்கன் ப்ரை பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு ஆனியன் சிக்கன் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆனியன் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
ஊற வைப்பதற்கு...
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 30-40 நிமிடங்கள் சிக்கனை வேக வைக்க வேண்டும். அதே சமயம் அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, நெருப்பை உயர்த்தி, நன்கு ட்ரையாகும் வரை கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி கிளறினால், சுவையான ஆனியன் சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications