Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Onam Special Pazham Nurukku Recipe In Tamil: கேரளாவில் மிகவும் கோலாகலமாக 10 நாட்கள் கொண்டாடப்படுவது தான் ஓணம் பண்டிகை. இந்த ஓணம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஓணம் சத்யா விருந்து தான். இது தான் இந்த பண்டிகையின் சிறப்பே. இந்த விருந்தில் வாழை இலையில் 15-க்கும் அதிகமான பாரம்பரிய கேரள உணவுகள் சமைப்பது வழக்கம்.

நீங்கள் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் ஒரு ஸ்பெஷலான கேரள ரெசிபியை செய்ய நினைத்தால், பழ நுருக்கு ரெசிபியை செய்யுங்கள். எப்படி தமிழ்நாட்டில் வாழைப்பழத்தைக் கொண்டு பஞ்சாமிர்தம் செய்யப்படுகிறதோ, அதேப் போல் கேரளாவில் செய்யக்கூடியது தான் பழ நுருக்கு.
உங்களுக்கு இந்த பழ நுருக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழ நுருக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* கனிந்த நேந்திரன் பழம் - 2
* சுக்கு - சிறிது
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கெட்டியான தேங்காய் பால் - 1 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் வெல்லத்தை எடுத்துக் கொண்டு,
அதில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை மெல்லிய வட்டத் துண்டுகளாக
வெட்டி, ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அடுப்பில்
வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து
நன்கு 2-3 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் சுக்கு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து
நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பொடியை வெந்து கொண்டிருக்கும் பழத்துடன் சேர்த்து,
உப்பு தூவி கிளறி நன்கு வேக வைக்க வேண்டும்.
* கலவையானது ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், துருவிய தேங்காய்,
கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி, நெய் ஊற்றி கிளறி, மூடி வைத்து
கெட்டியாகும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பழ நுருக்கு
தயார்.



Click it and Unblock the Notifications