Latest Updates
-
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்!
ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி
Onam 2023: கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில் ஒன்று தான் கூட்டு கறி.
இந்த கூட்டு கறியானது கிழங்குகள், சுண்டல், காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. நீங்கள் கேரளாவில் பிரபலமான இந்த கூட்டு கறியை உங்கள் வீட்டிலும் செய்ய நினைக்கிறீர்களா? இந்த கூட்டு கறி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஓணம் ஸ்பெஷல் கேரளா கூட்டு கறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா கூட்டு கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு - 1/2 கப்
* வாழைக்காய் - 1/2 கப்
* கருப்பு சுண்டல் - 1/2 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 2 பல்
* பச்சை மிளகாய் - 1
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
வறுப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கு மற்றும் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு,
சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு மற்றும்
வாழைக்காயை சேர்த்து, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள கருப்பு சுண்டலை குக்கரில் போட்டு, அதில் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய்,
மிளகு மற்றும் சீரகம் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள
காய்கறிகள், சுண்டல் மற்றும் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை தெளித்து, பச்சை வாசனை போக வேக
வைத்து இறக்க வேண்டும்.
* பச்சை வாசனை போனதும், மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில்
தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தாளித்ததை காய்கறிகளுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதையும் காய்கறிகளுடன் சேர்த்து
கிளறினால், சுவையான கேரளா கூட்டு கறி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











