Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
ஓணம் ஸ்பெஷலா இந்த அவியலை ட்ரை பண்ணுங்க.. காய் பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Onam Special Avial Recipe In Tamil: ஓணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்படவுள்ளது. ஓணம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது வாழை இலை போட்டு, அதில் பரிமாறப்படும் பலவிதமான பாரம்பரிய கேரள உணவுகள் தான். அதில் ஒன்று தான் அவியல்.
இந்த அவியல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையானதும் கூட. முக்கியமாக இது பலவிதமான காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுவதால் ஆரோக்கியமானதும் கூட. காய்கறிகளை சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி பலவிதமான காய்கறிகளைக் கொண்டு அவியல் செய்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஓணம் ஸ்பெஷல் அவியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓணம் ஸ்பெஷல் அவியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 2
* வாழைக்காய் - 1
* சேனைக்கிழங்கு - சிறிது
* கத்திரிக்காய் - 3
* கேரட் - 2
* புடலங்காய் - 1
* பீன்ஸ் - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* தயிர் - 5 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி
* சின்ன வெங்காயம் - 5
செய்முறை:
* முதலில் காய்கறிகள் அனைத்தையும் சற்று நீளவாக்கிலும், சற்று
மெல்லியதாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் காய்கறிகளை குக்கரில் போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சீரகம், நறுக்கிய தேங்காய்,
சின்ன வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு குக்கரைத் திறந்து, காய்கறிகளை கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு அகலமான வாணலியில் காய்கறிகளை நீருடன் அப்படியே எடுத்துக்
கொண்டு, அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, உப்பு
சுவை பார்த்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி
இறக்கினால், சுவையான ஓணம் ஸ்பெஷல் அவியல் தயார்.
Image Courtesy: Indian Recipes Tamil



Click it and Unblock the Notifications