Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Onam 2025: கேரளா ஸ்பெஷல் புளிசேரி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Onam 2025 Kerala Special Pulissery Recipe In Tamil: கேரளாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வரப்போகிறது. இந்த ஓணம் நாளில் சத்யா விருந்து மிகவும் பிரபலமானது. இந்த ஓணம் சத்யா விருந்தில் ஏராளமான கேரளாவின் பாராம்பரிய சைவ உணவுகள் இடம் பெற்றிருக்கும். அதில் ஒன்று தான் புளிசேரி. இந்த புளிசேரி வெள்ளரிக்காய், நேந்திரம் பழம் மற்றும் தயிர் கொண்டு செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ்ஷாகும்.
இந்த புளிச்சேரியை சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வருகிற ஓணம் பண்டிகை நாளில் உங்கள் வீட்டில் மதியம் அசத்தலாக சமைக்க நினைத்தால், புளிசேரியையும் சேர்த்து செய்யுங்கள். இந்த புளிசேரி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்பெஷல் புளிசேரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்பெஷல் புளிசேரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* நேந்திரம் பழம் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கெட்டி தயிர் - 1 லிட்டர்
* வெந்தயத் தூள் - 3/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கெட்டித் தயிர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட
வெள்ளரிக்காய் மற்றும் நேந்திரம் பழத்தை சேர்த்து, அத்துடன் பச்சை
மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து, காய்கறிகளை நன்கு வேக
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து, கெட்டி
தயிரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் கறிவேப்பிலை
சேர்த்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 1
நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 லிட்டர் கெட்டித் தயிரை நன்கு அடித்து சேர்த்து,
அதோடு வெந்தயத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
உருகியதும், கடுகு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அத்துடன் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து கிளறி,
புளிசேரியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கேரளா ஸ்பெஷல் புளிசேரி
தயார்.



Click it and Unblock the Notifications