Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி
இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு வட இந்திய ஸ்டைல் சைடு டிஷ் எதையாவது செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டாணி கிரேவி செய்யுங்கள்.
இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு வட இந்திய ஸ்டைல் சைடு டிஷ் எதையாவது செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டாணி கிரேவி செய்யுங்கள். இந்த பட்டாணி கிரேவி செய்வதற்கு வெங்காயம், தக்காளி எதுவும் தேவையில்லை, மசாலா பொடிகள் இருந்தாலே எளிதில் செய்யலாம். முக்கியமாக இந்த பட்டாணி கிரேவியை 15 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்ந்த பட்டாணி - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (தட்டியது)
* மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காய்ந்த பட்டாணியை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்த பட்டாணியை குக்கரில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி, வேக வைத்துள்ள பட்டாணியை சேர்க்க வேண்டும்.
* பிறகு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
