Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆந்திரா சிக்கன் குழம்பு
விடுமுறை நாட்களில் அதுவும் மேக மூட்டமாக இருக்கும் நேரத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட ஆசையாக இருக்கும். உங்களுக்கு இந்த வாரம் வித்தியாசமான சிக்கன் ரெசிபி ஏதாவது சமைத்து சப்பிட விருப்பம் இருந்தால், ஆந்திரா சிக்கன் குழம்பை செய்து சுவையுங்கள்.
இங்கு ஆந்திரா சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 1
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - நறுக்கியது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அத்துடன் அனைத்து மசாலா பொடிகளையும், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், 30-35 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அத்துடன் கரம் மசாலா மற்றும் வெண்ணெய் சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், ஆந்திரா சிக்கன் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications