Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நெத்திலி கருவாட்டு தொக்கு
என்ன தான் கருவாடு பலருக்கு நாற்றமாக இருந்தாலும், அதை சமைத்த பின் அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும். அதிலும் அந்த கருவாட்டை தொக்கு செய்து கஞ்சியுடன் சாப்பிட்டால் அதை விட சிறந்த உணவு இவ்வுலகிலேயே இல்லை எனலாம். அந்த அளவில் தேவாமிர்தம் போல் இருக்கும்.
இங்கு பலருக்கும் பிடித்த நெத்திலி கருவாட்டு தொக்கை எப்படி எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நொத்திலி கருவாடு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இறுதியில் கருவாட்டை சேர்த்து 3-4 நிமிடம் பிரட்டி, உப்பு சுவை பார்த்து இறக்கினால், ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு ரெடி!!!
Image Courtesy: soupstodesserts



Click it and Unblock the Notifications