Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
சிம்பிளான... நாட்டுக் கோழி குழம்பு
பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு தேங்காய் சேர்க்காமல் சுவையான நாட்டுக் கோழி குழம்பு வேண்டுமானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு சமைத்து சாப்பிடுங்கள்.
சரி, இப்போது நாட்டுக் கோழி குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
சிக்கன் மசாலா பவுடர் - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 செ.மீ
இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, அதில் பாதியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் குக்கரில் போட்டு கிளற வேண்டும்.
பிறகு அதில் உப்பு, சிக்கன் மசாலா சேர்த்து நன்கு வதக்கி, சிக்கனை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சிம்பிளான நாட்டுக் கோழி குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
