Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சிம்பிளான... நாட்டுக்கோழி கிரேவி
விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
சரி, இப்போது அந்த நாட்டுக்கோழி கிரேவியின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 1 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1
கல்பாசி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2-3 முறை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மசாலா பொடிகளான மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.
பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, 3/4-1 கப் தண்ணீர் ஊற்றி கிளறி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், நாட்டுக்கோழி கிரேவி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications