For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு

By Maha
|

இதுவரை இறாலைக் கொண்டு பலவாறு சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்ததுண்டா? இல்லையெனில், இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Marathi Prawn Curry

தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (அரைத்தது)
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான பொருட்கள்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி!!!

English summary

Marathi Prawn Curry

Marathi prawn curry is a recipe that hails from coastal Maharashtra. To try this Marathi prawn curry recipe at home, follow the instructions given here..
Story first published: Saturday, October 11, 2014, 17:00 [IST]
Desktop Bottom Promotion