For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீமா பக்கோடா: ரம்ஜான் ரெசிபி

By Maha
|

இஸ்லாமியர்கள் பெரும்பாலும் மட்டனைத் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த ரமலான் நோன்பு முடியும் தருவாயான இரவில் மட்டன் கீமாவைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் கீமா பக்கோடா செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, சுவையானதும் கூட.

இங்கு அந்த மட்டன் கீமா பக்கோடா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Kheema Pakora: Ramzan Special Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 2 கப் (500 கிராம்)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கபாப் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கீமா, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, பின் உப்பு, கபாப் மசாலா மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் கடலை மாவு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சரியான பக்கோடா பதத்திற்கு பிரட்டிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
கீமா பக்கோடா ரெடி!!!

English summary

Kheema Pakora: Ramzan Special Recipe

Ramzan recipes are specially important for the evenings when you break your fast. Try the kheema pakora recipe to have a delicious treat after your Ramzan fasting.
Story first published: Thursday, July 3, 2014, 13:58 [IST]
Desktop Bottom Promotion