குக்கரில் எளிய முறையில் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி?

Posted By: Bala Karthik
Subscribe to Boldsky

ரம்ஜான் நோன்பின் போது, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை நீங்கள் சேர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த விரத காலத்தின்போது...பட்டினி மற்றும் இழப்பினை நீங்கள் சந்திக்ககூடும் என்பதால்...உங்கள் உடலுக்கு தேவையான சக்தியை பெற...சீரான உணவை எடுத்துகொள்வது உங்கள் விரதத்தை முடிக்கும்பொழுது உதவுகிறது.

இன்று நாம் பார்க்கபோகும் டிஷ், பாரம்பரியத்தில் வித்தியாசத்தை காண்பிக்க கூடிய சிக்கன் ரோஸ்டே ஆகும். இந்த பாரம்பரிய சிக்கன் ரோஸ்டை, கடாயில் தீய வைத்து...அதன் பிறகு அடுப்பிற்கு (ஓவன்) மாற்ற வேண்டும். இந்த சிக்கன் ரெசிபியை ப்ரஸ்ஸர் குக்கரில் நாம் செய்ய வேண்டி இருக்கிறது. அத்துடன் இது மிகவும் எளிதாக சமைக்க கூடிய ஒன்றாகவும் அமைகிறது. இதனை இப்தார் அல்லது சுஹூரின் போது செய்து மகிழுங்கள்.

Easy Chicken Roast In A Pressure Cooker

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1கிலோ (பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்)

மிளகு- 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி கெட்ச்அப் - 2 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

அழகுபடுத்த:

கேரட் - 1 கப் (மெல்லியதாக வெட்டப்பட்டது)

உருளைகிழங்கு - 1 கப் (மெல்லியதாக வெட்டப்பட்டது)

பூக்கோசு - 1 கப்

Easy Chicken Roast In A Pressure Cooker

செய்முறை:

1.சிக்கன் பீஸை பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது, இரண்டு முழு கால்கள் மற்றும் மார்பு பகுதியை வெட்டிகொள்வது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

2.அதன்பின் பிரஸ்ஸர் குக்கரை எடுத்துகொண்டு, அதில் சுத்தம் செய்யப்பட்ட சிக்கன் பீஸை போட வேண்டும்.

3.அத்துடன் 2 டேபிள்ஸ்பூன் மிளகை தூவ வேண்டும். புத்துணர்ச்சிமிக்க நிலத்து மிளகினை எடுத்துகொள்வது சிறந்த மூலப்பொருளாக அமைகிறது. அப்படி இல்லையென்றால்...மார்க்கெட்டில் கிடைக்கும் மிளகு தூளை உபயோகிப்பதும் சிறந்ததாகும்.

4.அந்த மிளகு பவுடரை ப்ரஸ்ஸர் குக்கரில் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ள வேண்டும்.

5.அதன்பிறகு, பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ், மற்றும் தக்காளி கெட்ச்அப்பினை சேர்த்து கொள்ள வேண்டும். மறுபடியும் ப்ரஸ்ஸர் குக்கரில் இருக்கும் அனைத்தையும் நன்றாக கிண்டி கொள்ள வேண்டும்.

6.அடுத்து, வெண்ணெய் மற்றும் பூண்டு பேஸ்டையும் சேர்த்து மீண்டும் கிண்டி கொள்ள வேண்டும்.

7.நீங்கள் உபயோகிப்பது உப்பு வெண்ணெய்யாக இருப்பின்...கூடுதல் அளவு உப்பினை நீங்கள் சேர்க்க வேண்டிய தேவையில்லை. சாஸிலும் உப்பானது இயற்கையாகவே இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளவும். அந்த க்ரேவியை ருசி பார்த்து தேவைக்கேற்ப உப்பினை சேர்ப்பது கூடுதல் ருசியை தரும்.

8.தண்ணீரை நீங்கள் சேர்க்க தேவையில்லை.

9.ப்ரஸ்ஸர் குக்கரை மூடி ஸ்டவ்வில் வைக்க வேண்டும்.

10.இரண்டு விசில் சத்தம் கேட்கும் வரை அடுப்பில் வைப்பது அவசியமாகும்.

Easy Chicken Roast In A Pressure Cooker

11.அப்பொழுது, சிக்கன் பீஸானது அரை நிலையில் வேகவைக்கப்பட்டிருக்க, அந்த சிக்கன் பீஸை தனியாக எடுத்துவிட்டு, நீரை மட்டும் ப்ரஸ்ஸர் குக்கரிலே விட்டுவிடுங்கள்.

12.இப்பொழுது பொறிக்க தேவையான கடாயை எடுத்துகொண்டு, அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

13.அந்த எண்ணெய்யை நன்றாக சூடுபடுத்திகொண்டு, அதன் பின் அரை நிலையில் வேகவைக்கப்பட்டிருக்கும் சிக்கன் பீஸை அதில் போட வேண்டும். அதனை மிதமான சூட்டில் பொறிக்க வேண்டும். ஆம், அந்த சிக்கன் பீஸ், இந்த முறை முழுவதுமாக வேக வேண்டியது அவசியமாகும்.

14.எண்ணெய்யில் கிடக்கும் சிக்கன் பீஸை தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.

அழகுபடுத்துவது எப்படி:

1.நன்றாக நறுக்கப்பட்ட கேரட்டை எடுத்துகொள்ள வேண்டும். அதனை எண்ணெய்யில் போட்டு, மிருதுவாகும் வரை பொறிக்க வேண்டும். கண்டிப்பாக இதற்கு உங்களுக்கு சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது. அதன் பின், கிட்சன் டவலை கொண்டு வடிக்கட்டி அந்த கேரட்டை தனியாக நீக்கிவிட வேண்டும்.

2.அதேபோல், உருளைக்கிழங்கையும் மிருதுவாகும் வரை பொறிக்க வேண்டும். அதில் மீதமிருக்கும் எண்ணெய்யை கிட்சன் டவலை கொண்டு வடிக்கட்ட வேண்டும்.

3.ஒரு கடாயை எடுத்துகொண்டு, அதில் 2 கப் தண்ணீரை கொதிக்கவைக்க வேண்டும். அது ஒரு சுற்றில் கொதிக்கும்பொழுது, அத்துடன் கொஞ்சம் உப்பினையும் பூக்கோசினையும் (சிறுபூக்கள்) சேர்க்க வேண்டும்.

4.அதன் பிறகு 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து...அந்த பூக்கோசு பளபளப்பான பச்சை நிறம் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டியது அவசியமாகும்.

Easy Chicken Roast In A Pressure Cooker

5.இப்பொழுது பொறிக்கும் கடாயை எடுத்துகொண்டு, அதில் கொஞ்சம் வெண்ணெய் சேர்க்க வேண்டும். அந்த வெண்ணெய் உருகிய நிலையில் இருக்க, நறுக்கப்பட்ட பூண்டு கிராம்பை அத்துடன் சேர்க்க வேண்டும். சில வினாடிகளுக்கு அதனை வதக்கவேண்டும் (பூண்டின் நறுமனம் வரும் வரை)

6.இப்பொழுது, வடிக்கட்டிய பூக்கோசினை வெண்ணெய்யோடு சேர்க்க வேண்டும். அதனை 5 நிமிடங்களுக்கு வதக்கிகொள்ள வேண்டும். அதனை ஒரு தட்டில் தனியாக வைத்துவிடவும்.

7.அந்த சிக்கன் ரோஸ்டை அழகாக வரிசைபடுத்தி, சிக்கன் பீஸ்களை தட்டில் வைத்து, அந்த தேக்கிவைக்கப்பட்டிருந்த நீரை (ப்ரஸ்ஸர் குக்கரில் இருப்பது) தூவ வேண்டும். பின், பொறிக்கப்பட்ட கேரட் மற்றும் உருளைகிழங்கினை கொண்டு சிக்கனை அழகுபடுத்தவேண்டும். அதனை சூடாக பரிமாரி, சூடான வெண்ணெய் பூக்கோசுக்களுடன் சேர்த்து சாப்பிட்டு மனம் மகிழலாம்.

English summary

Easy Chicken Roast In A Pressure Cooker

Easy Chicken Roast In A Pressure Cooker
Story first published: Friday, June 9, 2017, 12:45 [IST]