For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை சாலட் சாண்ட்விச்

By Maha
|

காலையில் வேலைக்கு செல்வோருக்கு எளிமையான ஒரு ரெசிபி வேண்டுமானால், முட்டை சாலட் சாண்ட்விச் செய்யுங்கள். இது நல்ல ஆரோக்கியமான மற்றும் எளிதில் செய்யக்கூடியவாறு இருக்கும் ஒரு காலை உணவு. மேலும் இது மதியம் சாப்பிடுவதற்கும் ஏற்றவாறு இருக்கும்.

இங்கு அந்த முட்டை சாலட் சாண்ட்விச் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Egg Salad Sandwich

தேவையான பொருட்கள்:

முட்டை - 6 (வேக வைத்தது)
மயோனைஸ் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயத் தாள் - 1 குச்சி
பார்ஸ்லி - 1 (நறுக்கியது)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரட் - 8 துண்டுகள் (டோஸ்ட் செய்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மயோனைஸ், வெங்காயத் தாள், பார்ஸ்லி, உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் முட்டைகளை துண்டுகளாக்கி போட்டு, பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் டோஸ்ட் செய்த ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மீது அடித்து வைத்துள்ள கலவையை பரப்பி, பின் அதன் மேல் தக்காளி சிறிது தூவி, மற்றொரு பிரட் கொண்டு மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், முட்டை சாலட் சாண்ட்விச் ரெடி!!!

English summary

Egg Salad Sandwich

The egg salad sandwich for breakfast is also a less consuming recipe for you to try out. Working mums can also pack this highly nutritious dish for snack or lunch. Here is how you make the egg salad sandwich, take a look:
Story first published: Tuesday, December 17, 2013, 19:25 [IST]
Desktop Bottom Promotion