For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறால் மசாலா ரெசிபி

By Maha
|

இறாலைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். மேலும் கடல் உணவுகளிலேயே இறால் செய்வது என்பது மிகவும் எளிமையானது. குறிப்பாக அலுவலகம் முடிந்து வீட்டிற்கு அவசரமாக வந்ததும், ஏதேனும் அசைவ உணவு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், இறாலை வாங்கி வந்து, சூப்பரான முறையில் ஒரு மசாலா செய்து சாப்பிடலாம்.

இப்போது இங்கு அப்படி எளிமையான முறையில் செய்யக்கூடிய இறால் மசாலா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை இன்று முயற்சித்து பாருங்கள்.

Dry Masala Shrimps Recipe

தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது)
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, உப்பு போட்டு கழுவி நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் இறலைப் போட்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு தக்காளியை அரைத்து, வாணலியில் ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, தக்காளி சாஸ், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம், இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கினால், சுவையான இறால் மசாலா ரெடி!!!

English summary

Dry Masala Shrimps Recipe

There are many prawn recipes that you can try at home. However, when you are running late and have a fetish for seafood, then you can try the spicy masala shrimps. The recipe is very quick and is delicious too. Dry masala shrimps recipe is quick and one of the must try for seafood lovers. Check out the recipe.
Story first published: Wednesday, November 20, 2013, 18:26 [IST]
Desktop Bottom Promotion