Latest Updates
-
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க
செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு
செட்டிநாடு ஸ்டைல் உணவுகளின் சுவையே தனி தான். அதிலும் செட்டிநாடு ஸ்டைல் அசைவ உணவுகள் என்றால் நன்கு மணத்துடனும், காரமாகவும் இருக்கும். உங்களுக்கு இறால் பிடிக்குமா? அப்படியெனில் செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பை எப்படி செய்வதென்று தெரியுமா?
இங்கு செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2-4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 2 இன்ச்
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
குழம்பிற்கு...
எண்ணெய் - 1/4 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் மசாலா பொடியையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.
குழம்பில் இருந்து எண்ணெய் பிரியும் போது, அதில் இறாலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
