Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
வெங்காயம், தக்காளி இல்லாம வெறும் 10 நிமிடத்தில் சூப்பர் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்களேன்..
No Onion No Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு அருமையான சுவையில் சட்னி செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி என்று எதுவுமே இல்லையா? அப்படியானால் இந்த இரண்டும் இல்லாமலே அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம்.
இந்த நோ ஆனியன் மற்றும் நோ டொமேட்டோ சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, அனைத்து விதமான டிபனுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த சட்னியை ஒருமுறை செய்தால் பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க சொல்வார்கள்.

உங்களுக்கு வெங்காயம் தக்காளி சேர்க்காத சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் தக்காளி சேர்க்காத சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* வரமிளகாய் - 7-8
* பூண்டு - 8 பல்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* புளி - 2 இன்ச்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/4 கப் கடலைப் பருப்பு, 7-8 வரமிளகாய்
சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள், 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம், 2 இன்ச் புளி
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை 1/4 கப் சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அதில் சுவைக்கேற்ப
உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான
அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 2
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு, 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான வெங்காயம் தக்காளி சேர்க்காத சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











