Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காம சிக்கன் கிரேவி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க..
No Oil Coconut Chicken Gravy Recipe In Tamil: நீங்கள் சிக்கன் பிரியரா? சிக்கனை பலவிதங்களில் சமைத்து சாப்பிடுவீர்களா? அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? சமையலில் அதிகம் சேர்க்கமாட்டீர்களா? அப்படியானால் உங்களுக்காகவே ஒரு அற்புதமான ஒரு சிக்கன் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
அது தான் எண்ணெய் சேர்க்காத தேங்காய் சிக்கன் கிரேவி. இந்த கிரேவியில் ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இருந்தாலும் இந்த கிரேவி அவ்வளவு ருசியாக இருக்கும். முக்கியமாக இது சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என்று அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காத சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காத சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மல்லி - 2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 4
* ஏலக்காய் - 3
* வரமிளகாய் - 5
* இஞ்சி - 1 இன்ச் துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு,
சோம்பு, பட்டை, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும்
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய 1/4 மூடி தேங்காய், மிளகாய் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன் துண்டுகளை
சேர்த்து, சிறிது உப்பு தூவி, சிக்கன் நீர் விட்டு வரும் வரை வேக
வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து, 10-15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சிக்கன்
நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சிக்கன்
கிரேவி தயார்.
Image Courtesy: Delish



Click it and Unblock the Notifications