Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா
அடுப்பும் எண்ணெயும் பயன்படுத்தாம வாழைக்காய் கேரட் பொரியல் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
No Boil No Oil Vazhakkai Carrot Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டதா? பொரியல் மட்டும் தான் இன்னும் செய்யாமல் இருக்கிறீர்களா? இம்மாதிரியான சூழ்நிலையில் அடுப்பு இல்லாமலேயே ஒரு சுவையான பொரியலை செய்யலாம். முக்கியமாக இதில் எண்ணெயும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கு உங்கள் வீட்டில் வாழைக்காயும், கேரட்டும் இருந்தா போதும். ஒரு சுவையான பொரியலை செய்யலாம். இந்த வாழைக்காய் கேரட் பொரியல் டயட்டில் இருப்போருக்கு ஏற்ற ஒரு சுவையான சைடு டிஷ் என்றே சொல்லலாம்.

உங்களுக்கு அடுப்பும் எண்ணெயும் பயன்படுத்தாம வாழைக்காய் கேரட் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடுப்பும் எண்ணெயும் பயன்படுத்தாம வாழைக்காய் கேரட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிறிய வாழைக்காய் - 1
* சிறிய கேரட் - 1 ( தோல் நீக்கிவிட்டு துருவியது)
* மிளகு தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* இந்து உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதை சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது இந்து உப்பு
சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை சேர்த்து
கிளறி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள வாழைக்காயை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் துருவிய கேரட், மிளகுத் தூள், சீரகத் தூள், துருவிய
தேங்காய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு
கிளறினால், சுவையான மற்றும் சத்தான வாழைக்காய் கேரட் பொரியல்
தயார்.
Image Courtesy: Sharmispassion



Click it and Unblock the Notifications