Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
புத்தாண்டுக்கு கேரட்டும், ரவையும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட்டை செய்யுங்க... ருசியா இருக்கும்..
New Year 2026 Special Carrot Rava Payasam Recipe In Tamil: புத்தாண்டு நாளில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காலையில் ஒரு பிரமாதமான ஸ்வீட் செய்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா? அப்போது வழக்கமாக செய்யும் கேசரியை செய்து கொடுக்காமல், சத்தான கேரட் மற்றும் ரவையைக் கொண்டு ஒரு அற்புதமான பாயாசத்தை செய்து கொடுங்கள்.
இந்த கேரட் ரவா பாயாசம் சுவையானது மட்டுமின்றி சத்தானதும் கூட. மேலும் இந்த கேரட் ரவா பாயாசமானது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியானது. ஒருமுறை இந்த பாயாசத்தை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் எந்த பண்டிகை வந்தாலும், இந்த பாயாசத்தை செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் இந்த பாயாசம் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு கேரட் ரவா பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் ரவா பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 250 கிராம்
* பால் - 1 லிட்டர்
* முந்திரி - 10 (சுடுநீரில் ஊற வைத்தது)
* பாதாம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பிஸ்தா - 10 (பொடியாக நறுக்கியது)
* சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
* முதலில் முந்திரியை சிறிது சுடுநீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் 1/4 கிலோ கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், 2 டேபிள் ஸ்பூன் ரவையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து நன்கு நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரியை நீருடன் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பாலானது நன்கு கொதிக்கத் தொடங்கியதும், அதன் முனைகளில் உள்ள ஆடையை
எடுத்து விட்டு, அரைத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து 2 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து
கலந்து, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் சர்க்கரையை சேர்த்து 2 நிமிடம் மீண்டும் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான கேரட் ரவா பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications