Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ருசியான.. நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. சும்மா அள்ளும்..
Nallampatti Chicken Gravy Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்கப் போகிறீர்களா? எப்போது சிக்கனை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் சமைப்பீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சுவையுடைய சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் நல்லாம்பட்டி சிக்கன் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு நல்லாம்பட்டி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6 (விதைகளை நீக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 35-40
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கிறது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - பாதி
* ஜாவித்திரி - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்துங
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்
தூள் , உப்பு, ஆகியவற்றை சேர்த்து நன்கு கைகளால் அழுத்து பிரட்டி,
மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், விதைகளை நீக்கிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய
வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி,
பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து 4-5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் மல்லி,
பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஜாவித்திரி, சீரகம், சோம்பு, மிளகு,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிக்கன் நன்கு வெந்ததும், அதில் அரைத்த பொடியை சேர்த்து நன்கு
கிளறி, 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சிக்கனுடன் சேர்த்து கிளறினால், சுவையான
நல்லாம்பட்டி சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications