Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய... மைசூர் ரசத்தை எப்படி செய்வது தெரியுமா?
Mysore Rasam: எப்பவும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று வித்தியாசமான சுவையில் ஒரு ரசத்தை செய்து சாப்பிடுங்கள். அதுவும் இந்த ரசம் மைசூர் ஸ்பெஷல் ரசம்.
பொதுவாக கர்நாடகா ரெசிபிக்கள் அனைத்தும் சற்று இனிப்பு கலந்து இருக்கும். இந்த ரசமும் சற்று இனிப்பு சுவையைக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த மைசூர் ரசம் நாம் வழக்கமாக செய்யும் ரசத்தை விட முற்றிலும் வித்தியாசமானது. ஆனால் இது விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மைசூர் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* ரச பவுடர் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1
* உப்பு - 3/4 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
ரச பவுடருக்கு..
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 50 கிராம்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
மைசூர் ரச பவுடர் செய்வதற்கு..
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாயைப் போட்டு குறைவான தீயில் வைத்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம்,
மல்லி விதை, மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து குறைவான
தீயில் வைத்து நன்கு வறுத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி,
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களைப் போட்டு, நன்கு மென்மையாக
அரைத்தால், மைசூர் ரசப் பவுடர் தயார். இதை காற்றுப்புகாத ஒரு
டப்பாவில் போட்டு, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரசம் செய்வதற்கு...
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, 1 கப் நீரை
ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு
மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, அதை பிசைந்து வடிகட்டி
சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் ரசப் பவுடரை சேர்த்து 2-3 நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து, அதை வாணலியில்
ஊற்றி 2.-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு புளிச்சாறு மற்றும் வேக வைத்து மசித்துள்ள துவரம் பருப்பை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, வெல்லத்தை சேர்த்து கிளறி, 2 நிமிடங்கள்
குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து நீர் ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து, ரசத்துடன் சேர்த்து கிளறி, குறைவான தீயில்
வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான மைசூர் ரசம் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











