Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1/4 கப் துவரம் பருப்பும், 2 தக்காளியும் இருந்தா இந்த மைசூர் ரசத்தை வைச்சு பாருங்க... வேற லெவலில் இருக்கும்...!
Mysore Rasam Recipe in Tamil: தற்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருப்பதால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் நன்கு சூடாகவும், காரசாரமாகவும் ரசத்தை வைத்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவையாக மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் பல வெரைட்டி ரசம் உள்ளன. எவ்வளவு நாள்தான் தமிழ்நாட்டு வகை ரசங்களையே சாப்பிட்டுக் கொண்டிருப்பது. கொஞ்சம் பக்கத்து மாநிலத்து ரசத்தையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
பக்கத்து மாநில ரசம் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது மைசூர் ரசம். இந்த மைசூர் ரசம் வழக்கமாக சாப்பிடும் ரசம் போல இருக்காது. இந்த வித்தியாசமான மைசூர் ரசம் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த மைசூர் ரசம், பொதுவாக ரசம் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு மைசூர் ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மைசூர் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு - கால் கப்
- பழுத்த தக்காளி - 2
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- தனியா - 3 ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- சீரகம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- வெல்லம் - சிறிதளவு
- கருவேப்பில்லை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை நன்றாகக் களைந்து துளி மஞ்சள் பொடி , தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- தக்காளியை ஒரு கப் தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும், அதேபோல புளியையும் வேக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து சாறெடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர்தேங்காய்த் துறுவலைத் தனியாக சிறிதளவு நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தனியா, மிளகு, கடலைப்பருப்பு, வர மிளகாயை சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்து ஆற வைக்கவும்.
- இந்த கலவை ஆறியவுடன் வறுத்த தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு ஆழமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பு, கரைத்த புளிச்சாறு, அரைத்த பொடி அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- கலவை சற்று சுண்டியவுடன் வேக வைத்த பருப்பையும் மூன்று கப் தண்ணீரும் சேர்த்து நன்றாக கரைத்துச் கொதிக்க வைக்கவும்.
- ரசம் நுறைத்துப் பொங்கும் போது இறக்கி வைத்து விடவும்.
- பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொத்தமல்லி, கருவேப்பில்லையைச் சேர்க்கவும்.
- கொதிக்கும் போது துளி வெல்லம் சேர்க்கலாம்.
- ஒருவேளை காரம் அதிகம் தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாயையும் கொதிக்கும் போது சேர்க்கலாம்.
- அவ்வளவுதான் சுவையான மைசூர் ரசம் தயார்!



Click it and Unblock the Notifications