Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
மைசூர் மசாலா தோசை ரெசிபி வீட்லயே செஞ்சு சாப்பிட ஆசைப்படுறீங்களா? இந்த ரெசிபியை பாலோ பண்ணுங்க...!
Mysore Masala Dosai Recipe In Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு ஒரு நேரமாவது இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு உங்களுக்கு போராடிவிட்டதா? தனித்துவமான சுவையில், அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான ஒரு தோசை சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த உலகப் புகழ்பெற்ற மைசூர் மசாலா தோசையை முயற்சி செய்து பாருங்கள்.
இந்த மைசூர் மசாலா தோசை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதை விட முக்கியம் இந்த தோசைக்கு தனியாக எந்த சைடிஷும் தேவையில்லை. இந்த தோசை வித்தியாசமானதாக இருந்தாலும் இந்த தோசைக்கான மாவும் வழக்கம் போல, அரைத்து புளிக்க வைக்கப்படும் மாவுதான்.

இந்த தோசையின் ஸ்பெஷலே அதன் மீது வைக்கப்படும் மசாலாதான். உங்களுக்கு மைசூர் மசாலா தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் மைசூர் மசாலா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெசிபியை அப்படியே செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.
தேவையானப் பொருட்கள்:
சிவப்பு மிளகாய் சட்னி அரைக்க:
- 8-10 உலர்ந்த சிவப்பு மிளகாய்
- 1 2 பூண்டு பற்கள்
- 1 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
உருளைக்கிழங்கு மசாலா செய்ய:
- 3 நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு (வேகவைத்து தோல்
நீக்கியது)
- 1 பெரிய வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 4 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
- காய்ந்த மிளகாயிலிருந்து விதைகளை நீக்கி, வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பூண்டு, உப்பு மற்றும் சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக அரைக்கவும்.
- ஃப்ரிட்ஜில் காற்று புகாத பெட்டியில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி?
- வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும். 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும்.
மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?
- தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் தேய்க்கவும்.
- கல் சூடானதும் அதில் மெலிதாக தோசை மாவை ஊற்றவும்.
- பின்னர் தோசை மீது எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
- பின்னர் அரைத்து வைத்த சிவப்பு சட்னியை தோசை மீது தடவவும்.
- பின்னர் தயாரித்த உருளைக்கிழங்கு மசாலாவை தோசை மீது வைத்து பாதியாக மடிக்கவும்.
- இறுதியாக தோசையை இருபுறமும் திருப்பி வேகவைத்தால் சூப்பரான மைசூர் மசாலா தோசை ரெடி!



Click it and Unblock the Notifications