Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
மட்டன் வெங்காய மசாலா
இந்த வாரம் மட்டன் வாங்க நினைத்தால், அதைக் கொண்டு மட்டன் வெங்காய மசாலா செய்யுங்கள். இந்த மட்டன் வெங்காய மசாலா சப்பாத்தி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
வார விடுமுறை நாட்களில் தான் விருப்பமான அசைவ உணவுகளை வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கும். அதுவும் மழை பெய்யும் போது அசைவ உணவுகளை சாப்பிட பலருக்கும் ஆசை எழும். நீங்கள் இந்த வாரம் மட்டன் வாங்க நினைத்தால், அதைக் கொண்டு மட்டன் வெங்காய மசாலா செய்யுங்கள். இந்த மட்டன் வெங்காய மசாலா சப்பாத்தி, பரோட்டா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு மட்டன் வெங்காய மசாலா அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் வெங்காய மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வெங்காய மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* தேங்காய் எண்ணெய் - 1/2 கப்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 3 (அரைத்துக் கொள்ளவும்)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காய மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications