Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மட்டன் வாங்குனா.. ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Mutton Varuval Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? அந்த மட்டனை எப்போதும் ஒரே மாதிரி குழம்பு செய்து தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் இந்த வாரம் சிறிது மட்டனை எடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் வறுவல் செய்யுங்கள். இந்த மட்டன் வறுவலை ஒருமுறை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லிக் கேட்பார்கள்.
முக்கியமாக இந்த மட்டன் வறுவல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். அந்த அளவில் இதன் செய்முறை எளிமையாக இருக்கும். ரசம் சாதம் செய்து, இந்த வறுவலை செய்தால் போதும், அந்த வார விடுமுறை அருமையாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* சின்ன வெங்காயம் - 6-7
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 1
* முந்திரி - 7
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டனை
சேர்த்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இஞ்சி
பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 1 நிமிடம் மட்டனில் இருந்து
நீர் வெளிவரும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி 10 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கி,
முந்திரியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள்,
மல்லித் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள மட்டனை
நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால்
உப்பு சேர்த்து கிளறி, ஓரளவு நீர் வற்றும் வரை வேக வைக்க
வேண்டும்.
* நீர் வற்றியதும், அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறி,
கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான மட்டன் வறுவல்
தயார்.



Click it and Unblock the Notifications