Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
மட்டன் சுக்கா வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லா வாரமும் இனிமே இதைத்தான் செய்வீங்க....!
Mutton Sukka Varuval Recipe in Tamil: சண்டே வந்தாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அசைவ உணவுகள்தான். சிக்கன், மட்டன், மீன் மற்றும் முட்டை என சண்டே வந்தாலே மக்களை கையில் பிடிக்க முடியாது. இந்த சண்டே மட்டன் வாங்கப் போறீங்களா? அப்படினா வழக்கமான குழம்பு வைக்காம இந்த மாதிரி சுக்கா வறுவல் செஞ்சு பாருங்க. உங்களுக்கு மதுரை ஸ்டைல் சுக்கா வறுவல் எப்படி செய்யணும்னு தெரியாதா?
இந்த மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா வறுவல் குழம்பு 30 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு மதுரை ஸ்டைல் மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் இந்த சூப்பரான சைடிஸை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- மட்டன் - அரை கிலோ
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் -
30
- நறுக்கிய தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
- கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- முந்திரிபருப்பு - 5
- சோம்பு - 1 ஸ்பூன்
தாளிக்க:
- பட்டை - 1 துண்டு
- கிராம்பு - 3
- பிரியாணி இலை - 1
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை :
- மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் வெங்காயம், சிறிது பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மட்டன் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் மல்லித்தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு , ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் குக்கரை மூடி மட்டனை வேக வைக்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் அல்லது 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவொன்றாகச் சேர்க்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதேசமயம் குக்கரை திறந்து மட்டன் துண்டுகளை தனியாக வடித்து எடுத்து வைக்கவும்.
- மட்டனில் இருந்து வடித்து வைத்த தண்ணீரை வதங்கிக் கொண்டிருக்கும் மசாலாவில் ஊற்றி குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக வேக வைத்த மட்டன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி நன்கு கெட்டியானதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மட்டன் சுக்கா வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications