Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
மட்டனை வாங்குனா இந்த மாதிரி சுக்கா வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்... நொடியில் காலியாயிடும்...
Mutton Sukka Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் மட்டன் வாங்கும் எப்போது வழக்கமாக செய்வது போன்று அதைக் கொண்டு வெறும் குழம்பு செய்யாமல், ஒருமுறை அதைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள்.
இப்படி மட்டன் சுக்கா வறுவல் செய்யும் போது சுவை அள்ளும். மேலும் இது அனைத்துவிதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சுக்கா வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* அன்னாசிப்பூ - சிறிது
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 3/4 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 7
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அன்னாசிப்பூ,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, மல்லி,
பிரியாணி இலை, கறிவேப்பிலை, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து
குறைவான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பொடியை சேர்த்து, அத்துடன்
நல்லெண்ணெய் ஊற்றி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு
பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு மட்டனை நன்கு கழுவி, அதை அந்த பேஸ்ட்டுடன் சேர்த்து கைகளால்
நன்கு பிரட்டி விட வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை
சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, பின் மட்டன் துண்டுகளை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
5 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து
இறக்க வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, மீண்டும் அதை
அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைத்து
இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
