Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருமுறை செய்யுங்க.. ருசி நாக்குலயே நிக்கும்..
Mutton Sukka Masala Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் கட்டாயம் மட்டன் வாங்குவீர்களா? அப்படி மட்டன் வாங்கினால் ஒரே மாதிரி குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டன் சுக்கா என்றால் பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு மட்டன் சுக்கா செய்யத் தெரியாதா?
மட்டன் சுக்காவை ஈஸியாக அதுவும் மசாலா எதுவும் அரைக்காமல், வீட்டில் உள்ள மசாலா பொருட்களைக் கொண்டே அருமையான சுவையில் மட்டன் சுக்காவை செய்யலாம். இந்த மட்டன் சுக்கா ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். லீவு நாட்களில் சுலபமாக சமையலை முடிக்க நினைத்தால், மட்டன் சுக்காவை செய்து, ரசம் வைத்துவிடுங்கள் போதும். அதுவே பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 200 மிலி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மட்டனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
சோம்புத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு,
புளிப்பில்லாத தயிர் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு
பிரட்டி, மூடி வைத்து குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
கறிவேப்பிலை தூவி, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 5 நிமிடம் தொடர்ந்து
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 200 மிலி நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5-6 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மட்டனை கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே ஊற்றி, நீர்
வற்றும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications