Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சத்தான... மட்டன் ரசம்
இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு சிறிது ரசம் செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியே சூப் போன்றும் குடிக்கலாம்.
விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு சிறிது ரசம் செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியே சூப் போன்றும் குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மட்டன் ரசம் செய்து கொடுப்பது நல்லது. இதனால் மட்டனில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலில் சேரும்.

உங்களுக்கு மட்டன் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 4 (தோலுரித்து நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 10 விசில் விட்டு, குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள மட்டன் நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். (மட்டன் துண்டுகளைக் கொண்டு மட்டன் வறுவல் செய்து கொள்ளலாம்.)
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து, மட்டன் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், மட்டன் ரசம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications