Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காரசாரமான மட்டன் ரசம் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... மட்டன் குழம்பை விட சூப்பரா இருக்கும்...!
Mutton Rasam Recipe in Tamil: இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் ரசம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. எவ்வளவு பெரிய விருந்து சாப்பிட்டாலும் அதை ரசத்துடன் முடித்தால்தான் உண்மையான திருப்தியே ஏற்படும். ரசம் சுவையானதாக இருப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் அடையவும் வைக்கிறது. பொதுவாக அனைத்து வீடுகளிலும் தக்காளி ரசம், மிளகு ரசம் மற்றும் வெங்காய ரசம் போன்றவற்றை வைப்பார்கள்.
மதிய வேளையில் உங்கள் வீட்டில் எப்போதும் ரசம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் ரசத்தை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ரசம் செய்ய நினைக்கிறீர்களா?
அசைவப் பிரியர்களுக்கு பிடிக்கும் வகையில் மட்டனை ரசம் வைத்து சாப்பிட்டுள்ளீர்களா? பொதுவாக மட்டனை வேக வைத்த தண்ணீரைத்தான் மட்டன் ரசம் என்று கூறுவார்கள். ஆனால் இந்த மட்டன் ரசத்திற்கென்று தனி செய்முறையே உள்ளது. இதை அசைவ உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம் அல்லது இதை மட்டுமே சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். இந்த பதிவில் சுவையான மட்டன் ரசத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- எலும்புடன் கூடிய மட்டன் -1/4 கிலோ
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- தோல் உரித்த சின்ன வெங்காயம் - 10
- பெரிய தக்காளி- 1
- வரமிளகாய்- 8
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை கொத்து
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பூண்டு - 3 பல்
- மல்லி விதை - 1/2 ஸ்பூன்
செய்முறை:
- மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
- வரமிளகாயை சின்ன சின்னதாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் மிளகு சீரகம், மல்லி, மற்றும் பூண்டை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- சுத்தம் செய்த மட்டனை உப்பு, மஞ்சள் சேர்த்து 20 நிமிடம் வைக்கவும்.
- குக்கரில் அல்லது வானலியில் எண்ணெய் காயவைத்து வரமிளகாய் போட்டு அதன் விதை பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
- உடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் மட்டன் சேர்க்கவும் நன்கு கிளறவும்.
- பிறகு தக்காளி சேர்க்கவும், தக்காளி தோல் விட்டு தனியாக வரும் வரை வதக்கவும்.
- வரமிளகாயும் நன்கு வதங்கும் வரை காத்திருக்கவும்.
- மிளகாய், தக்காளி நன்கு வெந்த பின்னர் 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் .
- அடுப்பை சிம்மில் வைத்து குக்கரில் 5 முதல் 8 நிமிடம் வரை மிதமான நெருப்பில் வேகவைக்கவும்.
- நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,மல்லி, மற்றும் பூண்டு கலவையை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
- சூப்பரான மட்டன் ரசம் ரெடி, இதை சூடான சாத்தத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications