Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
முகலாய மன்னர்களுக்கு பரிமாறப்பட்ட மட்டன் நிஹாரி ரெசிபி... இந்த ராஜ உணவை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா?
Mutton Nihari Recipe in Tamil: இந்திய மக்கள் அசைவ உணவுகளை வித்தியாசமாக பல வழிகளில் சமைத்து சாப்பிட முகலாயர்களின் ஆட்சி மிகவும் முக்கியமான காரணமாக இருந்தது. இன்று பெரும்பாலான மக்களுக்கு விருப்பமான உணவாக இருக்கும் பிரியாணி முகலாயர்களால் அறிமுகப்படுத்தபட்டதுதான்.
முகலாய மன்னர்கள் அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்களாக இருந்தனர். அதில் முக்கியமான ஒரு உணவுதான் மட்டன் நிஹாரி. பாரம்பரியமாக நிஹாரி இரவு முழுவதும் சமைக்கப்பட்டு, காலை பிரார்த்தனைக்குப் பிறகு காலை உணவாக டெல்லியின் முகலாய மன்னர்களுக்கு வழங்கப்பட்டது.

முகலாயர்களின் அரச சமையலறைகளில் இருந்த இந்த உணவு இப்போது எல்லைகளைக் கடந்து நம் வீட்டு சமையலறை வரை வந்துவிட்டது. இருப்பினும், நிஹாரி சமைக்க நீண்ட நேரம், கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆகும் என்பதால், இது பெரும்பாலும் விருந்துகள் மற்றும் பிற பண்டிகைகள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசவை உணவான நிஹாரி மட்டனை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கிலோ மட்டன்(பெரிய துண்டுகளாக வாங்கவும்)
- 4 டீஸ்பூன் நெய்
- 2 பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி விழுது
- 1 ஸ்பூன் பூண்டு விழுது
- 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 ஸ்பூன் கோதுமை மாவு
- 3 ஸ்பூன் நிஹாரி மசாலா
நிஹாரி மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் உலர்ந்த இஞ்சி
- 5-6 பச்சை ஏலக்காய்
- 2 கருப்பு ஏலக்காய்
- 4-5 கிராம்பு
- 1 பிரியாணி இலை
- 1 அங்குல இலவங்கப்பட்டை
- 1 ஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் துருவிய ஜாதிக்காய்
அலங்காரத்திற்கு
- அரை எலுமிச்சைப்பழ சாறு
- கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- நிஹாரி மசாலாவை உருவாக்க, மசாலாவிற்கான அனைத்து மசாலாப் பொருட்களையும் மிதமான தீயில் வறுக்கவும். பின்னர் அவற்றை ஆறவைத்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். நெய்க்கு பதிலாக எண்ணெயை கூட பயன்படுத்தலாம், ஆனால் நெய் பயன்படுத்தி சமைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- பின்னர் மட்டன் துண்டுகள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அனைத்து துண்டுகளிலும் மசாலா படும்படி 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
- பின்னர் நிஹாரி மசாலா மற்றும் 8 கப் தண்ணீர் சேர்க்கவும். இதனை நன்கு கலந்து மூடி வைத்து இறைச்சி மென்மையாகும் வரை சுமார் 4 மணி நேரம் மிகக் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். இடையிடையே நன்கு கிளறி விடவும். கரண்டியால் உடைத்தால் மட்டன் உடையும் வரை வேக வைக்க வேண்டும்.
- கோதுமை மாவை அரை கப் தண்ணீரில் கட்டிகள் இல்லாதவாறு கரைக்கவும். பின்னர் இதை கிரேவியில் மெதுவாக சேர்த்து நன்கு கலக்கவும், குழம்பு கெட்டியாகும் வரை மேலும் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். இப்பொது சூடான மட்டன் நிஹாரி ரெடி!



Click it and Unblock the Notifications





