Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சன்டே ஸ்பெஷல்: மணமணக்கும்... சுவையான... மட்டன் ஈரல் குழம்பு
Mutton Liver Kuzhambu In Tamil: வார இறுதி வந்தாலே அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் வாய்க்கு ருசியாக நன்கு சமைத்து, பொறுமையாக ருசித்து சாப்பிடலாம். இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் மட்டன் ஈரலை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த மட்டன் ஈரலை வாங்கி, அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த மட்டன் ஈரல் குழம்பு, இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் ஈரல் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் ஈரல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செது சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச் துண்டு
* வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* நாட்டு தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* மட்டன் ஈரல் - 500 கிராம்
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசாலாவிற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை
சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு 6-7
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும்
வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்த சில நிமிடங்கள் நன்கு மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், மிளகாய்
தூள் மற்றும் மட்டன் மசாலா பவுடரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து சில நொடிகள் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு மட்டன் ஈரலைக் கழுவி, குக்கரில் போட்டு, நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில்
வைத்து, அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு
இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











