வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்..

Posted By:

Varuthu Aracha Mutton Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் முடிந்து, ஐப்பசி மாதம் பிறந்துவிட்டது. இதுவரை அசைவ உணவு சாப்பிடாமல் கட்டுப்பாட்டில் இருந்த பலரும் இந்த ஒரு நாளுக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி ஐப்பசி மாதம் பிறந்த நிலையில், வாய்க்கு நல்ல சுவையான ஒரு விருந்து வைக்க நினைக்கிறீர்களா? அதுவும் மட்டனை சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் மட்டன் குழம்பு வைப்பதாக இருந்தால், ஒருமுறை வறுத்தரைச்ச மட்டன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, இட்லி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட ஏற்றவாறு இருக்கும்.

Mutton Kuzhambu How To Make Varuthu Aracha Mutton Kuzhambu Recipe

உங்களுக்கு இந்த வறுத்தரைச்ச மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10-15
* வரமிளகாய் - 3
* காஷ்மீரி மிளகாய் - 2
* ஜாதிபத்திரி - சிறிய துண்டு
* பட்டை - 1 துண்டு
* கருப்பு ஏலக்காய் - 1
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், ஜாதிபத்திரி, பட்டை, கருப்பு ஏலக்காய், மல்லி, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, இங்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு நீர் விடும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால் சுவையான வறுத்தரைச்ச மட்டன் குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 18, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion