Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
மட்டன் குழம்பை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. எப்பவும் இப்படி தான் செய்வீங்க..
Mutton Kuzhambu Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே, காலையில் இட்லி மட்டன் குழம்பு சாப்பிட்டால் தான், அந்த நாளே சிறப்பாக இருக்கும். அதனால் தான் பெரும்பாலானோரின் வீட்டில் ஞாயிற்றுக் கிழமை இட்லி, மட்டன் குழம்பு செய்யப்படுகிறது. இன்று காலை உங்கள் வீட்டிலும் இது தான் மெனுவா?
அப்படியானால் மட்டன் குழம்பை வைப்பதாக இருந்தால், வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மசாலா பொடியை தயாரித்து செய்யுங்கள். இப்படி மட்டன் குழம்பை செய்யும் போது, அது இட்லிக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இப்படி மட்டன் குழம்பை ஒருமுறை செய்தால், பின் எப்போதும் இந்த மாதிரி தான் மட்டன் குழம்பை செய்வீர்கள்.

உங்களுக்கு மசாலா பொடி அரைத்து மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* பாதாம் - 10
* முந்திரி - 10
* ஜாவித்திரி - 1
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 3
குழம்பிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 750 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாதாம், முந்திரி,
ஜாவித்திரி, கசூரி மெத்தி, மல்லி, சீரகம், மிளகு மற்றும் காஷ்மீரி
வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடி
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் செய்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், அரைத்த பொடி, மிளகாய் தூள், கரம்
மசாலா சேர்த்து மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications