Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
Mutton Kuzhambu Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பெரும்பாலான வீடுகளில் காலை டிபனாக இட்லியும், மட்டன் குழம்பும் தான் இருக்கும். உங்கள் வீட்டிலும் பெரும்பாலும் இந்த டிபன் செய்வீர்களா? அதுவும் எப்போதும் மட்டன் குழம்பை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் மட்டன் குழம்பை செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் ஒருமுறை மட்டன் மசாலா பொருட்கள் சேர்த்து ஊற வைத்து, வறுத்து அரைத்த மசாலாவை சேர்த்து குழம்பு செய்யுங்கள். இப்படி செய்யும் குழம்பு சற்று புதுமையான சுவையில் இருப்பதோடு, இந்த குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1 கிலோ
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 100 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* தக்காளி - 2 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
* ஊற வைத்த மட்டன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,
அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்
சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை
மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில்
வைத்து, கரம் மசாலா சேர்த்து கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications